ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை குஷ்பு சினிமா, அரசியல், சின்னத்திரை, குடும்பம் என பல தளங்களில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறவர். அடிக்கடி அரிய கருத்துக்களை சொல்லி பரபரப்பையும் ஏற்படுத்தி விடுவார். நாட்டுப்புற பாட்டு படத்தில் நடனமாடியபோது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்தது. அதன் பிறகு வீரம் விளைஞ்ச மண்ணு படத்தில் நடித்தபோதும் தவறி விழுந்து அதே இடத்தில் காயம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒரு கன்னட படத்தில் நடித்தபோது தவறி விழுந்து அதே காலில் அடிப்பட்டது, கட்டுப்போட்டுக் கொண்டார். தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: என் கால் முட்டியில் நான்காவது முறையாக தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. முட்டி நகராமல் இருபதற்கான உபகரணங்களை பொருத்தியிருக்கிறார்கள். இந்த முறை பெரிய காயம் இல்லை என்றாலும் ஒரே இடத்தில் நான்காவது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று எழுதியிருக்கிறார் குஷ்பு.