ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான மெகா படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த இந்த படம் இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இதுவரை இந்தி படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் பெரிய வசூலை ஈட்டி வந்த நிலையில், தற்போது பாகுபலியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
இந்த நிலையில், பாகுபலி-2 பட வேலைகளில் தற்போது ராஜமவுலி டீம் இறங்கியுள்ளது. இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் கேரக்டர்களின் முக்கியத்துவம் இடம்பெறுகிறதாம். அப்படியென்றால் முதல் பாகத்தோடு தமன்னாவின் கேரக்டர் முற்று பெறுகிறதா? என்று விசாரித்தபோது, முதல் பாகத்தில் புரட்சி ப்ளஸ் கவர்ச்சி பெண்ணாக நடித்த தமன்னா, 2ஆம் பாகத்தில் கிளாமர் ரோலில் நடிக்கிறாராம். அதாவது முதல் பாகத்தில் பிரபாசுடன் அவர் நடித்த பச்சை தீ நீயடா -என்ற பாடலில் தனது முதுகு கவர்ச்சியை ஓவராகவே காட்டி நடித்திருந்தார் தமன்னா. ஆனால் இளவட்ட ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட அந்த காட்சி விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆனால் அந்த படம் ரிலீசானபோது அதுபற்றி எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து அந்த தமன்னா இப்போது வாய் திறந்துள்ளார். அந்த பாடலுக்கு அந்த கிளாமர் தேவைப்பட்டது. அதோடு அதை அழகியலோடு படமாக்கியிருந்தனர். இன்னும் பார்க்க வேண்டும் என்கிற உணர்வை தூண்டும் வகையில் அந்த காட்சிய அற்புதமாக படமாகியிருந்தது. அதோடு குடும்பத்துடன் படம் பார்த்த யாருமே அதை ஆபாசமாக குறிப்பிடவில்லை. மாறாக, ஆண்-பெண் என அனைவருமே ரசித்தனர். அதனால், பாகுபலி-2 விலும் ஒரு பாடல் காட்சியில் கிளாமராக நடிக்கிறேன். அதற்கு இளவட்ட ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்கிறார் தமன்னா.