ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தின் போஸ்டர், ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அதிகப்படியான லைக்குகள் கொடுத்து இதுவரை விஜய் படங்கள் செய்யாத சாதனைகளை நிகழ்த்த வைத்துள்ளனர். மேலும், அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டுள்ள புலி படத்தின் பப்ளிசிட்டிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில் வெளியாகும் இந்திய படங்களில் புலி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கும அப்படக்குழுவினர், அதிகபட்சம் 2500 தியேட்டர்களில் புலி ட்ரெய்லரை வெளியிடப்போகிறார்களாம். குறிப்பாக, ஸ்ரீதேவிக்கு உள்நாடு, வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருப்பதால் வெளியிடும் ட்ரெய்லர்களில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.
மேலும், யு டியூப்பில் புலி ட்ரெய்லர் வெளியாகி பல முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகப்படியான நபர்கள் பார்த்து ரசித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியில் இம்ராம்கான்-கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகியுள்ள கட்டி பட்டி என்ற படத்தின் இடைவெளியிலும் புலி டிரெய்லர் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது.