காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
நடிகர் அஜித்தின் மைத்துனியான ஷாம்லி கதாநாயகியாக நடிப்பது என முடிவு செய்த தகவல் வெளியே பரவியதும் அவரிடம் பல இயக்குநர்கள் கதை சொல்ல முயன்றனர்.
யார் மூலம் ஷாம்லியை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் பல இயக்குநர்கள் திணறிப்போனார்கள். வேறு சிலர் எப்படியோ அவரது நம்பரைப் பிடித்து பேசியபோது, மறுபடி நீங்கள் என்னை அழைக்காதீர்கள்... நானாக அழைக்கிறேன் என்று மாதக்கணக்கில் காத்திருக்க வைத்தார். அதனால் பல இயக்குநர்கள் வேறு நாயகியைத் தேடிப்போனார்கள்.
இதற்கிடையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும், விக்ரம் பிரபு நடிக்கும் வீரசிவாஜி என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஷாம்லி. ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் 'வீரசிவாஜி'. தகராறு என்ற படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இப்படத்தை இயக்குகிறார். வீரசிவாஜி படத்தின் துவக்க விழா இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விக்ரம் பிரபுவின் பெற்றோரான நடிகர் பிரபு, புனிதா பிரபு இருவரும் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலேயே சில நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.