14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் (தல 56) இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது. படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்தநிலையிலும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்துக்கு பெயர் சூட்டவில்லையே தவிர படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் உருவாகிவிட்டன என்றும் அடுத்த மாதம் ஆடியோ வெளியீடு நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் பிசினஸை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஏறக்குறைய முடித்தேவிட்டார் என்ற தகவலும் அடிபடுகிறது. சென்னை ஏரியாவை லதீஃப் புரெடாக்ஷன் என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை எம்.கே. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மதுரை, கோவை, சேலம் திருநெல்வேலி-கன்னியாகுமரி, திருச்சி- தஞ்சாவூர், ஆகிய ஐந்து ஏரியாக்களின் விநியோக உரிமையை சுஸ்மா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி உள்ளதாம்.
தல 56 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவதற்குள் பெரிய தொகையைக் கொடுத்து என்ன தைரியத்தில் படத்தை வாங்கி உள்ளனர்? தல 56 படத்தை வாங்கிய நிறுவனங்கள்தான் ஏ.எம்.ரத்னத்திடமிருந்து என்னை அறிந்தால் படத்தின் விநியோக உரிமையையும் வாங்கிதாம். பாண்டிச்சேரி, வடஆற்காடு, தென்ஆற்காடு ஆகிய பெரிய ஏரியாக்களின் விநியோக உரிமையை சண்முகா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாண்டிச்சேரி சுரேஷ் என்பவர் வாங்கி உள்ளார்.
தல 56 படத்தின் ஏரியா வியாபாரம் அனைத்தும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது மட்டுமல்ல, இந்த வியாபாரத்ததில் மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் வெளி மாநில, வெளிநாடு விநியோக உரிமைகளின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதி அன்று தல 56 படத்தை வெளியிட உள்ளனர்.