Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அசினுக்கு ஆல் இஸ் வெல் கொடுத்த அதிர்ச்சி!

23 ஆக, 2015 - 09:02 IST
எழுத்தின் அளவு:
All-is-well-gaves-shock-to-Asin

மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர் அசின். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானதால் அடுத்தடுத்து, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம் என பல ஹிட் படங்களில் நடித்து தமிழில் உச்ச நடிகையாக திகழ்ந்தார். அதையடுத்து கஜினி படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்த அசினுக்கு அதன்பிறகு அங்கு படங்கள் புக்கானதால் தென்னிந்திய சினிமாவை மறந்து விட்டு முழுநேர இந்தி நடிகையாகி விட்டார். இதற்கிடையே விஜய் நடித்த காவலன் படத்தில் மட்டுமே நடித்த அசினுக்கு இந்தியில் நடித்த அரை டஜன் படங்களும் வெற்றியாகவே அமைந்தன. இருப்பினும் அதன்பிறகு அவருக்கு எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. அதனால் அபிஷேக் பச்சன் நடித்த ஆல் இஸ் வெல் என்ற படத்தில் மட்டுமே இரண்டு வருடங்களாக நடித்து வந்தவர், இந்த படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட வேண்டும் என்று மும்பை தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தியையும் சமீபத்தில் அறிவித்து விட்டார்.


ஆனபோதும், தான் நடித்துள்ள கடைசி படத்தின் மீது அசினுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படம் வெற்றி பெற்றால் தான் நடித்த கடைசி படமும் ஹிட் படம் என்கிற மனநிறைவோடு சினிமாவை விட்டு வெளியேறலாம் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதோடு படத்தின் வெற்றியை முன்வைத்து தனது பாலிவுட் சினிமா நண்பர்களுக்கு ஒரு மெகா பார்ட்டி கொடுத்து விட்டு விடைபெறவும் திட்டமிட்டிருந்தாராம் அசின். ஆனால், கடந்த 21-ந்தேதி அன்று வெளியான ஆல் இஸ் வெல் படம் படுதோல்வியடைந்து விட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அசின், பார்ட்டி கொண்டாட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in