ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள, ''ஸ்ரீமந்துடு'' எனும் தெலுங்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் கோரடலா சிவா இயக்கியுள்ள ஸ்ரீமந்துடு திரைப்படம் தமிழில், ''செல்வந்தன்'' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. 'செல்வந்தன்' படத்திற்கான டப்பிங்கை மகேஷ் பாபுவே தமிழில் பேசியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையில் பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு தமிழில் சரளமாக பேசக்கூடியவர். எனவே அவரே விரும்பி தமிழில் டப்பிங் பேசியதாகக் கூறப்படுகின்றது. நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்குஇசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் செல்வந்தன் படத்தின் பாடல்கள் வெளியீடு வரும் ஜூலை 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் மகேஷ் பாபு இயக்குநர் கோரடலா சிவா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.