ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க போகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போது ஹீரோயின் தேர்வு உள்ளிட்ட பிற நடிகர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த சூழலில் ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது. பின்னர் அந்த செய்தியை நடிகை ராதிகா ஆப்தேவும் மறுத்து இருந்தார். ஆனால் இப்போது ராதிகா ஆப்தே நடிப்பது உறுதியாகியுள்ளது. படக்குழு எல்லோரும் அவரை உறுதி செய்துவிட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டும் வௌியிடாமல் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ராதிகா ஆப்தே தான் ரஜினி பட ஹீரோயின் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவே அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து அழகு ராஜா, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் பெரிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆபாச போட்டோ, வீடியோ போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் ராதிகா ஆப்தே.
பொதுவாக ரஞ்சித் படம் என்றாலே அதில் யதார்த்தம் இருக்கும். அதேப்போன்று ரஜினி படத்தையும் யதார்த்தம் மீறாமல் இயக்க போகிறார் ரஞ்சித். முற்றிலும் புதிய மற்றும் இளைய தலைமுறையினரோடு பணியாற்ற இருக்கிறார் ரஜினி. முன்னதாக சக கலைஞர்களோடு ரஜினியும் சமீபத்தில் நடிப்பு பயிற்சி எல்லாம் ஈடுபட்டார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.