ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் முன்னாள் கதாநாயகன் ஸ்ரீகாந்த் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். நடிகர் ராம் சரண் நடித்த கோவின்டுடு அன்டரிவடலே படத்தில் அவரது மாமாவாக நடித்த ஸ்ரீகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.நடிகர் ஆதி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளன. அதிரடி சண்டைக் காட்சிகள் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளதாக இயக்குநர் கூறுகின்றார்.