மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 56வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது பின்னி மில்லில் அஜீத், லட்சுமிமேனன் நடித்த காட்சிகள் பெருவாரியாக படமாக்கப்பட்டன. அதில் அண்ணன்-தங்கை பாசத்தை சொல்லும் காட்சிகளே அதிகமாக படமானது. இந்த நிலையில், தற்போது படக்குழு கொல்கத்தாவில் முகாமிட்டுள்ளது. கதைப்படி ப்ளாஷ்பேக்கில் அஜித்தின் இன்னொரு முகத்தை காட்டும் காட்சிகள்தான் இப்போது படமாகிக்கொண்டிருக்கிறதாம். அதில் அஜித்துடன் சூரி இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
படம் முழுக்க அஜித்தின் நண்பர் போன்று நடித்துள்ள சூரி, காமெடி காட்சிகள் மட்டுமின்றி, அஜித்தின் பிரச்சினைகளில் பங்கெடுக்கும் தோழனாக நடித்திருக்கிறாராம். மேலும், ஸ்ருதிஹாசனை கொல்கத்தாவில்தான் அஜித் சந்திக்கிறாராம். அதனால் அவர்களது ஓப்பனிங் காட்சிகள் மட்டுமின்றி காதல் உருவாகும் காட்சிகளெல்லாம் கொல்கத்தா லொகேசனில்தான் படமாகப்போகிறதாம். அந்த வகையில், கிட்டத்தட்ட படத்தில் இடம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த பெருவாரியான காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்கிவிட்டுதான் சென்னை திரும்புகிறதாம் அஜித் டீம்.