ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வீரம்' சிவா இயக்கத்தில், அஜித் மீண்டும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கோல்கட்டாவில் ஆரம்பமானது. இப்படத்தில் அஜித் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சென்னையில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பை அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது. அங்கு சில பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். இப்போது கோல்கட்டாவில் படக்குழுவினர் அனைவரும் முகாமிட்டுள்ளார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன், அஜித் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள். கோல்கட்டாவின் முக்கிய வீதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அஜித் தான் கார் டிரைவராக நடித்தாராம். ஆனால், ஸ்ருதிஹாசன் வக்கீல் கோட் அணிந்து காட்சிகளில் நடித்துள்ளார். அந்தத் தகவல் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே கோல்கட்டாவிலிருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மிகவும் வேகமாகப் பரவியது.
இதற்கு முன்னும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அஜித், லட்சுமி மேனன் கலந்து கொண்ட படப்பிடிப்புக் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவின. இப்போது மீண்டும் அதே போல் பரவி வருகிறது.
அஜித் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பெயர் கூட வைக்க முடியாத படத்திற்கு இப்படி ஒரு பில்டப் கொடுக்கிறார்களே...!