ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தங்களது மொழி தாண்டி மற்ற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்பதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து நகைச்சுவையில் கலக்கி வரும் பிரமானந்தம் போன்ற ஒரு சில அரிதான விதிவிலக்குகள் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகம் தமிழ் காமெடி நடிகர்களை இருகரம் கூப்பி வரவேற்கவே செய்கிறது.
அப்படித்தான் மோகன்லாலின் 'சினேக வீடு' படத்தில் அப்புக்குட்டிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவுக்கு மோகன்லால் நடித்த 'என்னும் எப்பொழு' படத்தில் ஆட்டோ ட்ரைவர் வேடம் கிடைத்தது. அதில் மோகன்லாலை சந்தேகப்பட்டு வேவு பார்க்கச்செல்லும் அமலாபாலை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சவாரி செல்லும்போது அமலாபாலிடம் மாட்டிகொண்டு முழிப்பவராக பிரமாதமாக நடித்திருந்தார்.