ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விக்ரம் பிரபுவின் கேரியர் எந்த ஆர்ப்பாட்டமும், அவசரமும் இல்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் இதுவரை நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரத்துரை படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை. ஆனால் எல்லாமே தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்கள். அதனால் அப்பா பிரபு போல மினிமம் கியாரண்டி நடிகராக வளர்கிறார் விக்ரம்.
தற்போது அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்திலும், வாகா படத்திலும் நடித்து வருகிறார். இதில் இது என்ன மாயம் படப்படிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. வாகா இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்கோபால் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்குகிறார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. செப்டம்பரிலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது.