Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயினாக ஜெயிக்க முடியாமல் போன சரண்யா மோகன்

15 ஜூலை, 2015 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Saranya-Mohan-fails-to-shine-as-heroine

சரண்யா மோகன் விரைவில் திருணம் செய்து கொள்ளப்போகிறார். மற்ற நடிகைகளிலிருந்து சரண்யா மோகன் வித்தியாசமானவர். எளிமையான அழகு, எப்போதும் சிரித்த முகம், பார்த்தவுடன் பிடித்துப் போகும் தோற்றம் சரண்யாவின் பிளஸ். ஆனால் அதுதான் அவருக்கு மைனசாகவும் அமைந்தது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான சரண்யா மோகன் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அவரால் ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை. அவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழகிய கண்களுக்கு ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது அவரது துரதிர்ஷ்டம்.


தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்தபோது யாருக்கும் அவரைத் தெரியாது. யாரடி நீ மோகினி படத்தில் துறுதுறுப்பான பெண்ணாக நடித்தபோதுதான் அனைவரும் அவரை கவனித்தனர். அதற்கு பிறகு பல படங்களில் அவர் ஹீரோ அல்லது ஹீரோயின்களின் தங்கையாக நடித்தார். விளைவு அவரை அந்த ஸ்தானத்திலிருந்து ரசிகனால் மாற்றிப் பார்க்க முடியாமல் போனது.


பஞ்சாமிர்தம், அழகர் சாமியின் குதிரை, வெண்ணிலா கபடி குழு படங்களில் அவர் ஹீரோயினாக நடித்தபோதும் அது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களாக அமைந்து விட்டது. ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை என்றதும் மீண்டும் வேலாயுதம் படத்திலிருந்து தங்கையாக நடிக்க ஆரம்பித்து விட்டார். வெண்ணிலா கபடி குழு இந்தியில் பதேல்பூர் பாய்ஸ்சாக ரீமேக் ஆனபோதும், தெலுங்கில் பீமிலி கபடி ஜிட்டு என ரீமேக் ஆனபோதும் அவரே நடித்தார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு பேசப்பட்டாலும் ஒரு ஹீரோயினாக கடைசி வரை அவரால் ஜெயிக்க முடியவில்லை.


திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக ஜெயிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. சிறந்த நடன கலைஞரான சரண்யாமோகன் நடன லைஞராக தன் வாழ்வை தொடரலாம். அல்லது குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடிக்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in