ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹரிதாஸ் என்ற படத்தில் ஒரு டீச்சர் வேடத்தில் நடித்தார் சினேகா. அதன்பிறகு பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படத்தில் நாயகியாக நடித்தார். இந்த இரண்டு படங்களிலுமே சினேகாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது.
அதோடு, பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த சினேகா, சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான காவல் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். முக்கியமாக இப்படத்தில் அவரது முகத்திலும், உடம்பிலும் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாத அளவுக்கு பழைய சினேகாவாகவே பளிச்சிட்டார்.