ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் வெளியான படங்களில் ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படம்தான் வெற்றிப்படம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள். சில படங்கள் வெளியான அடுத்தநாளே வெற்றி வெற்றி என்று கூவுகிறார்கள். அதெல்லாம் வெற்றிப்படம் என மக்களை நம்ப வைத்து தியேட்டருக்கு வர வைக்கும் தந்திரம்தான். வெற்றிப்படம் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் எல்லாம் உண்மையான வெற்றிப்படம் இல்லை. ரூ.80 லட்சத்தில் எடுக்கப்பட்ட காக்கா முட்டை படம் இதுவரை ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. காக்கா முட்டை படத்தை அடுத்து வசூலில் வெற்றியடைந்த படம் என்றால் ரோமியோ ஜூலியட் படம்தான். இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருக்கிறதாம். ரோமியோ ஜூலியட் படம் வர்த்தகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை 6.5 கோடிக்கு விலை போயிருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களில் சாட்டிலைட் ரைட்ஸ் அதிகவிலைக்கு விற்கப்பட்ட படம் ரோமியோ ஜூலியட் படம்தான்.