Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 மாதங்களில் 7 ஹிட் (மட்டுமே) கொடுத்த மலையாள சினிமா.!

01 ஜூலை, 2015 - 14:30 IST
எழுத்தின் அளவு:
Malayalam-cinema-gave-only-7-hits-in-past-six-months

ஜூன்-30 வரை மலையாளத்தில் கிட்டத்தட்ட 68 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த 6 மாதங்களில் 7 ஹிட் மட்டுமே கொடுத்துள்ளது மலையாள சினிமா. கடந்த வருடம், ஆறு மாதங்களில் இது 8 ஹிட்டாக இருந்தது. ஸ்டார் வேல்யூ உள்ள படங்கள் கூட பெரிய அளவில் போகாதது தான் ஆச்சர்யம். இந்த 7 ஹிட்டுகளில் மம்முட்டிக்கு இரண்டும் நிவின்பாலிக்கு இரண்டும் சொந்தமானவை என்றால் மற்ற ஸ்டார்களின் நிலையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.


பிக்கெட் - 43


இந்த வருடத்திய முதல் ஹிட். மேஜர் ரவி இயக்கத்தில், பிருத்விராஜ் நடித்த இந்தப்படம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ஒரு இந்திய ராணுவ வீரனுக்கு பாகிஸ்தான் ராணுவ வீரருக்கும் ஏற்படும் ஆத்மார்த்தமான நட்பை படம்பிடித்து காட்டியது


பயர்மேன்


கடந்த வருடம் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் வசூல் ரீதியாக தோல்விகளையும் சந்தித்து வந்த மம்முட்டிக்கு இந்த வருடத்தின் டீசன்ட் ஹிட்டை தந்த முதல் படம் இது. தீபு கருணாகரன் இயக்கிய இந்தப்படம் நகரத்தின் மையப்பகுதியில் திடீரென ஏற்படும் தீ விபத்தையும், அதன் பின்னால் மறைந்துள்ள தீவிரவாத சதியையும் வைத்து பரபரப்பாக எடுக்கப்பட்டிருந்தது.


ஒரு வடக்கன் செல்பி


கடந்த வருடங்களில் தொடர்ந்து ஹிட்டுகளாக கொடுத்துவந்த நிவின்பாலிக்கு இந்த வருட ஆரம்பத்தையும் வெற்றிகரமாக துவக்கி வைத்த படம் தான் ஒரு வடக்கன் செல்பி. காட்சிக்கு காட்சி வசனங்களாலும் காட்சி பதிவுகளாலும் கைதட்டலை அள்ளிக்கொண்டே இருக்கவேண்டும் என முடிவு செய்து எடுக்கப்பட்ட படம்போல தியேட்டர்களை அதிரவைத்து நூறு நாட்களையும் தாண்டியது. நாலரை கோடியில் எடுக்கப்பட்டு 21 வசூலை அள்ளியது. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் ரீமேக்காகும் உரிமையும் நல்ல விலைக்கு போயுள்ளதாம்.


என்னும் எப்பொழும்


கடந்த வருடத்தில் பிளாப் படங்களாகவே கொடுத்து, இந்த வருட ஆரம்பத்தில் நட்புக்காக நடித்த 'ரசம்' படமும் காலை வாரியத்தில் வருத்தில் இருந்த மோகன்லாலுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது இந்தப்படம். சத்யன் அந்திக்காடு இயக்கிய இந்தப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு சுமாரான லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.


பாஸ்கர் தி ராஸ்கல்


பிப்ரவரியில் மம்முட்டியின் முதல் படமாக வெளியான 'பயர்மேன்' ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது என்றால், மம்முட்டியின் இரண்டாவது படமாக வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படமும் தியேட்டர்கள் மூலமாக 17 கோடியும் சாட்டிலைட் ரைட்ஸ் மூலமாக சுமார் 6 கோடியும் வசூலித்தது. கோடி ரூபாய் வசூலித்து ஹிட்லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. இதன் மொத்த பட்ஜெட்டே ஐந்தரை கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்திரேட்டன் எவிடயா


கடந்த வருட இறுதியிலும் சரி.. இந்த வருட ஆரம்பத்திலும் சரி.. திலீப் நடிப்பில் வெளியான 'வில்லாளி வீரன்' மற்றும் 'இவன் மரியாதராமன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவி அவரை சோர்வடைய செய்திருந்தன.. ஒரு தயக்கத்துடன் தனது அடுத்த படமான 'சந்திரேட்டன் எவிடயா' படத்தை ரிலீஸ் செய்தார். வழக்கம்போல இதுவும் சாதாரண படமாக இருக்கும் என்று நினைத்தால் கிட்டத்தட்ட 12 கோடி கலெக்சனை தாண்டி, திலீப்பிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


பிரேமம்


இதுவரையிலான கலெக்சன் 33 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளரான அன்வர் ரஷீத் பணத்தை அடுக்கி வைக்க பீரோக்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கேள்வி. அல்போன் புத்தரனும் நிவின்பாலியும் இணைந்து மீண்டும் வீடுகட்டி அடித்திருக்கிறார்கள். இதன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in