ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொம்பன் படத்தில் நடிக்கும் வரை நான் பள்ளி மாணவி என்று கூறிவந்தார் லட்சுமி மேனன். விக்ரம்பிரபு, விஷால், கார்த்தி, விமல் போன்றவர்களுடன் நடித்தார். அப்போதெல்லாம் பள்ளிச்சிறுமியாக இருந்து கொண்டு காதல் காட்சிகளில், நெருக்கமான காட்சிகளில் எல்லாம் நடிக்கிறீர்களே என்று கேட்ட போது அப்பாவி போல சிரித்து மழுப்பினாரே தவிர ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டார்.
ஒருக்கால் இவர் பள்ளியில் படிப்பதாக பொய் சொல்லி வருகிறாரோ என்று கூட ஊடகங்கள் சந்தேகப்பட்டன. இப்போது பள்ளிப்படிப்பு முடிந்து விட்டது. கல்லூரி போய் விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இத்தனை நாள் அப்பாவி முகம் காட்டி வந்த லட்சுமி மேனன், இப்போது முத்தக் காட்சியெல்லாம் பெரிய விஷயமே இல்லை. முத்தக் காட்சி, நெருக்கமான காட்சி இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா என்று அசால்டாக பேட்டி கொடுக்கிறார். கதைக்குத் தேவைப்பட்டால் ஒரு நடிகையாக அப்படி நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைகிறார்களாம் திரையுலகினர். அட கல்லூரி போனதும் மேஜரானதும் துணிவு வந்து விட்டது, கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டார் என்று பேசிக்கொள்கிறார்கள்.