Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரஜினி சாரின் அழைப்புக்காக காத்துகிட்டிருக்கேன் : ஹன்சிகா சிறப்பு பேட்டி

15 ஜூன், 2015 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Hansika-Motwani-interview

வட நாட்டில் இருந்து வந்தாலும் தமிழ் பெண்ணாகவே மாறி இங்கேயே தங்கி விடும் நடிகைகளில் குஷ்புவுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டாலும் தன் எடையை கணிசமாக குறைத்து, இன்னும் அழகாகி தனக்கென தனி முத்திரையோடு வலம் வருகிறார். கைநிறைய படங்கள், அடுத்தடுத்த ஹிட்டுகள் என பரபரப்பாக இருக்கிறார். தற்போது அம்மா பிடியிலிருந்து சற்று விடுபட்டு சுதந்திரமாகியிருக்கிறார். மீடியாக்களை அம்மா துணையின்றி சந்திக்கிறார். அவரை நாம் சந்தித்தபோது....


போகிற போக்கை பார்த்தால் அசல் வெள்ளை தமிழச்சியாகவே மாறிடுவீங்க போல...?


ஆமாங்க அதான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. எனக்கும் சவுத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்துகிட்டே இருக்குதுங்க. நான் பிறந்து வளர்ந்தது மும்பையில்தான். சப்பாத்தி குருமாதான் எங்க புட். ஆனால் எனக்கு பிடிச்சது இட்லி சாம்பார்தான். எனக்காகவே எங்கம்மா இட்லி பண்ணித் தருவாங்க. ஸ்கூலுக்கும் இட்லிதான் எடுத்துட்டு போவேன். ஸ்கூல்ல என்னை எல்லோரும் "இட்லி பொண்ணு"ன்னு கிண்டல் பண்ணுவாங்க. இப்போ தமிழ்ல நடிக்க வந்துட்டேன். இங்க வந்த பிறகு பாவாடை தாவணிதான் பிடிச்ச டிரஸ்-. இப்பல்லாம் மும்பை வீட்டுல இருந்தா பாவாடை தாவணிதான் கட்டுறேன். கூட்டி கழிச்சு பார்த்தால நான் சவுத் இண்டியன் பொண்ணாகவே மாறிட்டேன்.


அதனாலதான் இந்தி படங்களை வேண்டாம்னு சொல்றீங்களா?




இந்தியிலதான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். ஹீரோயினா அறிமுகமானதும் இந்தியில்தான். இப்பவும் இந்தி படங்கள் ரொம்ப பிடிக்கும். தமிழ், தெலுங்கு படங்கள் அடுத்த இரண்டு வருஷம் வரைக்கும் கமிட் ஆயாச்சு. இந்தியில் நடிக்க டயம் இல்லை. அதோட தமிழ், தெலுங்கு எனக்கு ரொம்ப கம்பர்டபிளா இருக்கு. அதான் இப்போ வேண்டாம் பின்னாடி நடிச்சுக்கலாமுன்னு இருக்கேன்.


ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளில் நடிப்பதில்லையே.... பயமா?


அப்படியெல்லாம் எதுவுமில்லை. அரண்மனை ஹீரோயின் படம்தானே. என்னை சுற்றித்தானே கதையே நகரும். அதில் நான் நன்றாக நடிக்கவில்லையா?. தமிழில் எப்போதாவதுதான் ஹீரோயின் சப்ஜெக்ட் வருகிறது. இப்போதான் ஜோதிகா மேடம் நடிச்ச 36 வயதினிலே வந்திருக்கு. நல்ல கதையோடு வந்தால் நானும் நடிப்பேன்.


புலியில் உங்க கேரக்டர் பற்றி...?


அய்யோ... சத்தமா கேட்காதீங்க. புலி படம் பற்றி மூச்சு விடக்கூடாது. கதை அப்படி. தமிழ் சினிமாவில் இதுவரை அது மாதிரி படம் வந்ததில்லை. இனி வரப்போறதில்லைன்னு பேசிக்கிறாங்க. நான் இளவரசியா நடிக்கிறேன். கிலோ கணக்கில் நகைகள், பட்டு உடைகள் அணிந்து ஒரு இளவரசியாகவே வாழ்ந்திட்டிருக்கேன். மேக்அப்புக்கு மட்டும் 3 மணிநேரமாகும், ஸ்ரீதேவி மேடம் பார்த்துட்டு நிஜமாகவே இளவரசி மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க. எனக்கு அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்திச்சு.


விஜய் எப்படி?


நீங்க அவரை அடுத்து பேட்டி எடுக்கும்போது எப்படிங்க வருஷத்துக்கு வருஷம் அழகாயிட்டே போறீங்கன்னு கேட்டு எனக்கு சொல்லுங்க. நான் கேட்டதுக்கு சின்னதா சிரிச்சுட்டு போயிட்டார். அடக்கம், அமைதின்னா அவர்தாங்க. அவரை தூர நின்னு பார்த்துக்கிட்டிருந்தாலே நிறைய கத்துக்கலாம்.


இந்த வருஷம் 5 குழந்தைகளை தத்து எடுத்திருக்கிறதா சொல்றாங்களே உண்மையா?


தயவு செய்து இந்த கேள்வியை தவிர்க்க முடியுமா? நான் குழந்தைகளை தத்து எடுக்கிறத பற்றி நிறைய எழுதி நான் ஏதோ விளம்பரத்துக்காக பண்ற மாதிரியான தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க. நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே எங்க அம்மா ஆரம்பிச்சது அது. நான் இப்போ சம்பாதிக்கிறதால அதிகமா செய்ய முடியுது. குழந்தைகளுக்கு ஒரு ஹோம் கட்டுறதுதான் அடுத்த திட்டம். அதுக்காக இடம் வாங்கிருக்கேன். வருடா வருடம் அவர்களை டூர் அழைச்சிக்கிட்டு போவேன். இந்த வருடம் போக முடியலை. என்னை அவர்களும். நான் அவர்களையும் நிறைய மிஸ் பண்றோம்.


யாருடனும் நெருக்கமாக பழக மாட்டேங்றீங்களாமே? உண்மையா?


தனியாக காரணம் எதுவுமில்லை. எப்போதுமே நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் மற்றதுக்கு எனக்கு நேரமில்லை. அதையும் தாண்டி குஷ்பு மேடமும், சுந்தர்.சி சாரும் என்னோட நல்ல வெல்விஷர்கள். இன்னும் சில நண்பர்களும் இருக்கிறார்கள்.


ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?


ரஜினி சார்கூட நடிக்க மாட்டேன்னு யாராவது சொல்வாங்களா?. அந்த அழைப்புக்காக காத்துகிட்டிருக்கேன்.


ஒருவேளை நடிக்க வராமல் இருந்திருந்தால்...?


விமான பணிப்பெண்ணாகியிருப்பேன். சின்ன வயதிலிருந்தே அதுதான் கனவு. நான் விமான பணிப்பெண்ணாக நடிச்ச படம் எல்லாம் ஹிட்டாயிடும். இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு நினைக்கிறேன்.


அநியாயத்துக்கு இளைச்சிப்போயிட்டீங்களே?


வெயிட் போட்டா பம்ளிமாஸ்னு கிண்டல் பண்றீங்க. இளைச்சா இளைச்சிட்டீங்களேன்னு கேக்றீங்க நான் என்னதான் செய்யட்டும் நீங்களே சொல்லுங்க.


சரி எப்படி இளைச்சீங்கன்னு சொல்லுங்க?


இதுல பெரிய ரகசியம் எதுவும் இல்லை. நான் ஜிம்முக்கே போறதில்ல. சாப்பாட்டுல கண்ட்ரோல் கிடையாது. ஒன்லி யோகாதான். நம்புங்க... நான் இளைச்சதுக்கு காரணம் யோகாதான்.


நடிகைகளின் தனிப்பட்ட வீடியோக்கள் அடிக்கடி நெட்டில உலவுகிறதே....?


அடுத்த கேள்விக்கு போகலாமா...


மேகி நூடுல்ஸ் விளம்பர படத்துல நடிச்சவங்க மேல கேஸ் போட்டிருக்காங்களே...?


சின்ன பொண்ணுகிட்ட பெரிய கேள்வியெல்லாம் கேட்காதீங்க.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in