ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபலமான மாகி நூடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 17 மடங்கு கூடுதலாக ரசயான உப்பு கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்ககளில் மாகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கியமான நூடுல்ஸ் என்று விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியதாவது: நான் எப்போதுமே விளம்பரப் படங்களில் நடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பேன். அந்த நிறுவனத்தின் நம்பகத் தன்மையில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே நடிப்பேன். அதையும் மீறி தவறுகள் நடந்தால் அதற்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுத்தான் ஒப்பந்தம் செய்வேன். அப்படித்தான் நெஸ்லே நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளேன். பிரபலங்கள் மீது அடிக்கடி சர்ச்சை வருவது சகஜம்தான் அதை சமாளித்துதான் ஆக வேண்டும் என்கிறார் அமிதாப்.