ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தற்போது சொந்தமாக தயாரித்து இயக்கி வரும் படம் மெட்ரோ. இதில் பாபி சிம்ஹா, ஸ்ரீரிஷ், சத்யா, செண்ட்ராயன், யோகி பாபு, கிருத்திகா நடித்துள்ளனர். ஜோஹன் இசை அமைத்துள்ளார், என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
"ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது அந்த நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கம்தான். அந்த தங்கம் எப்படி பதுக்கப்படுகிறது. எப்படி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. சமூக விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எப்படி அதை கையாள்கிறார்கள். அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் முதல் அரசாங்கம் வரை தங்கம் எப்படி ஆட்சி செய்கிறது என்பதுதான் கதை. அமெரிக்காவை விட இந்தியாவில் தங்கம் அதிகம் ஆனால் அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கிறது இந்தியா ஏழை நாடாக இருக்கிறது. காரணம் வெளியில் புழங்கும் தங்கத்தை விட ரகசியமாக புழங்கும் தங்கம்தான் அதிகம்.