ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெல்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெல்கம் பேக் படம் உருவாகி உள்ளது. இவருடன் ஸ்ருதிஹாசன், நானா படேக்கர், அனில் கபூர், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் முடியாததால் ஜனவரிக்கு தள்ளிப்போனது. அப்போதும் படம் ரிலீஸாகவில்லை. அடுத்தவாரம் மே 29ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் தள்ளிப் போய் உள்ளது.
வெல்கம் பேக் படத்தை ரம்ஜான் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு எண்ணியுள்ளதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது. அன்றைய தினம் தான் சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகி வரும் பஜ்ரங்கி பகிஜான் படமும் ரிலீஸாக இருக்கிறது. இதனால் ஒரேநாளில் ஜான் ஆபிரஹாம் படமும், சல்மான் கான் படமும் மோதும் சூழல் உருவாகியுள்ளது.