ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும், 2008 - 2009, 2009 - 2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்வதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய இராம.நாராயணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பி.அமிர்தம், திரைப்பட நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நடிகர்கள் வாகை சந்திரசேகர், சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரா, குமரிமுத்து, நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.