ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆனஸ்ட்ராஜ்' படத்தில் விஜயகாந்தின் நண்பனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது நடிப்பால் தமிழ்ரசிகர்களை வசீகரித்தவர் மலையாள குணச்சித்திர நடிகர் தேவன்.. பின்னர் ரஜினியுடன் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் இவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பளிச்சென அடையாளம் காட்டியது. இப்போதுவரை வில்லன், குணச்சித்திர நடிகர், பாசமான தந்தை என எதோ ஒரு வேடம் இவருக்கு தயார் நிலையில் தான் இருக்கிறது.. ஆனால் தனது குட்லுக்கே பலமுறை தனக்கு எதிராக இருந்துள்ளது என்கிறார் தேவன். ஆள் பார்ப்பதற்கு கலராக இருப்பதாலும், இயல்பாக நடிப்பதாலும் இவருடன் நடித்த பல நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடிக்கும் காட்சியின்போது இவரது தோற்றத்தை கொஞ்சம் 'டிம்' பண்ணிக்கொள்ளுமாறு கேட்டது பலமுறை நடந்தது உண்டு என்கிறார் தேவன். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என மற்றவர் நம்மிடம் சொல்லும்போது பெர்சனலாக தன்னம்பிக்கை தந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இந்த குட்லுக் எனக்கு பலமுறை எதிராகவே இருந்துள்ளது என்கிறார் தேவன்.