ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிவடைந்துள்ளது. சென்னை, கேரளா, தலக்கோணம் ஆகிய ஊர்களில் புலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதை அடுத்து இப்படத்திற்கான பாடல் காட்சி கம்போடியாவில் படமாக்கப்பட்டது. விஜய் உடன் ஹன்சிகா மோத்வானி பங்குபெறும் பாடல் காட்சிகள் மட்டும் அங்கே படமாக்கப்பட்டன. அதற்காக, இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், மற்றும் 40 நடன கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் கடந்த மாதம் கம்போடியா நாட்டுக்குச் சென்றனர். அங்கு விஜய், ஹன்சிகாவுடன் 40 நடனக் கலைஞர்களும் பங்கேற்கும் பாடல்காட்சி படமாக்கப்பட்டநிலையிலி, அங்கிருந்து பல்கேரியா சென்றனர். அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக தாய்லாந்தில் புலி படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை திரும்புகிறது புலி படக்குழு.
இதற்கிடையில் விக்ரம் நடித்து விரைவில் வெளியாக உள்ள 10 எண்றதுக்குள்ளே படத்துடன், விஜய்யின் புலி படத்தின் தியேட்டரிகல் டிரெய்லரை வெளியிட இருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது. முன்னதாக புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வௌியிட உள்ளனர்.