ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார்.
ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே "நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே" என்று சொல்ல ஆரம்பித்தனர். கவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார்.
வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான். அடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.