ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடி விட்டார் தமன்னா. தற்போது ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்காக ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இந்தநிலையில், தமிழில் அடுத்தடுத்து புதிய படங்கள் எதிர்பார்த்தபடி கையில் சிக்கவில்லை என்றபோதும், கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி விட்ட மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று கோதாவில் இறங்கியிருக்கிறார் தமன்னா. அதன்காரணமாக, முன்பு சில படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாட அழைத்தபோது, நானாவது குத்தாட்டம் ஆடுவதாவது என்று எகிறிப்பேசி தேடிச்சென்ற வாய்ப்புகளை திருப்பி விட்ட தமன்னா, இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் இணைந்து கலக்கல் குத்தாட்டமாடியிருக்கிறார். அதோடு, தனது கவர்ச்சியை அந்த பாடலில் ஏற்கனவே நடித்த படங்களை விட இன்னும் பளிச்சென்று வெளிச்சம் போட்டிருக்கிறாராம் தமன்னா.