ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, சிம்புவை வைத்து தயாரித்துள்ள படம் வாலு. புதியவர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள இப்படம், இரு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஆரம்பமானது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை, சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு உள்ளிட்ட பல பிரச்னைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே போனது. ஒருவழியாக தற்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.
வாலு படம் பற்றி இயக்குநர் விஜய் சந்தர் நம்மிடம் கூறியதாவது, நடுத்தர குடும்பத்து பையனின் வாழ்க்கை சம்பவம் தான் வாலு. இந்தப்படத்தில் சிம்பு, ''ஷார்ப்'' என்ற ரோலில் நடிக்கிறார். திருவெற்றியூரை சுற்றி படமாக்கப்பட்டிருக்கும் வாலு படத்தில், சிம்பு பார்ப்பவர்கள் ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்று உணருவார்கள். எல்லோரது வாழ்க்கையிலும் அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்களை வாலு படம் நிச்சயம் ஞாபகப்படுத்தும். சிம்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவரை தூக்கி நிறுத்த போகிற படம் தான் இந்த வாலு. நிச்சயம் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். சிம்பு - ஹன்சிகா காதல் முறிவால், இருவருக்கும் இடையேயான டூயட் பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட முடியவில்லை. மற்றபடி பாடல்களும், படமும் சிறப்பாக வந்துள்ளது.
வாலு படம் முழுவதையும் சிம்பு, அவரது அப்பா-அம்மா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் பார்த்தனர். படம் நன்றாக வந்திருப்பதாகவும், நிக் ஆர்ட்ஸால் படத்தை வௌியிட முடியாததால் படத்தை டி.ராஜேந்தரே ரிலீஸ் செய்ய இருக்கிறார். வாலு படம் கண்டிப்பாக ஜூன் 5ம் தேதி அல்லது ஜூன் 12ம் தேதி வௌிவரும். மேலும் இந்தப்படம் நிச்சயம் சிம்புவுக்கு வாழ்க்கை தருகின்ற படமாக இருக்கும் என்று அடித்து சொல்கிறார் விஜய் சந்தர்.