விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான நட்சத்திரத் தேர்வுகள் மற்ற விவாதங்கள் இடைவிடாமல் நடந்து வருகிறதாம். இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு படமாக்க வேண்டும் என்று ஷங்கரிடம் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படம் 'எந்திரன் 2' படமாக உருவாகுமா அல்லது புதிய கதையுடன் கூடிய படமாக இருக்குமா என்பது விவாதத்திற்குப் பின்னர்தான் தெரிய வரும் என்கிறார்கள். பொதுவாக தன்னுடைய படங்களின் கதை விவாதங்கள் உட்பட பல விஷயங்களில் ரஜினிகாந்தின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். 'பாபா' படத்திலிருந்தே ரஜினி அவருடைய படங்களில் தலையிட்டு வருகிறார் என்று சொல்வார்கள். சமீபத்தில் படுதோல்வியடைந்த 'லிங்கா' படத்தின் கதை விவாதத்தில் கூட ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என அப்படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரே அவர் அளித்த பேட்டியில் ஒத்துக் கொண்டார்.
இந்த நிலையில் இந்தப் புதிய படத்திற்கு கதையை எழுத பிரபல எழுத்தாளரான ஜெயமோகனை ஷங்கர் நியமித்திருக்கிறார் என்கிறார்கள். ஷங்கரின் படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் அதில் இருக்கும் கதையும், சில அறிவுத்தனமான காட்சிகளும் முக்கிய காரணம். எழுத்தாளர் சுஜாதா இருந்தவரை ஷங்கருக்கு அது எளிதாக இருந்தது. சுஜாதாவின் கற்பனையில் உருவான கதையையும், திரைக்கதையையும் அப்படியே காட்சிப்படுத்தினாலே போதும் பாதி வெற்றி கிடைத்துவிடும். அதைத்தான் அவரும் இத்தனை நாட்களாக செய்து கொண்டிருந்தார்.
சுஜாதாவின் துணை ஷங்கருக்கு இல்லாதது 'ஐ' படத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. எழுத்தாளர்கள் சுபாவின் எழுத்து வடிவம் அந்தப் படத்திற்குப் பெரிதாக உதவி செய்யவில்லை. அதனால், ரஜினிகாந்த் படத்திற்கு எழுத்தாளரை மாற்றி விட்டார் ஷங்கர்.
ஜெயமோகன் இதுவரை பணிபுரிந்த படங்களான “கஸ்தூரிமான், நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், ஆறு மெழுகுவர்த்திகள், காவியத் தலைவன்” ஆகிய படங்களில் 'நான் கடவுள், அங்காடித் தெரு'' ஆகிய படங்கள் மட்டுமே அதிகம் பேசப்பட்டது.
இப்போது ஷங்கர் - ஜெயமோகன் கூட்டணி என்ன செய்யப் போகிறது என்பதை திரையுலகத்தினர் மட்டுமல்லாது இலக்கியவாதிகளுடம் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.