ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாய்ஸ் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்தவர்களில் தேவயானியின் தம்பி நகுலும் ஒருவர். அதையடுத்து காதலில் விழுந்தேன் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. என்றாலும், அடுத்தடுத்து நடித்த மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்கள் அவருக்கு தொடர் தோல்விகளாக அமைந்தன.
இந்த நிலையில், அட்டகத்தி தினேசுடன் இணைந்து அவர் நடித்து வெளியான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என் படம் ஓரளவு வெற்றி பெற்றதோடு, அப்படத்தில் நகுல் ஏற்று நடித்த இளம் விஞ்ஞானி ரோல் அவரை மறுபடியும் பேச வைத்தது. அதனால், தற்போது நகுலுக்கு ஓரளவு மார்க்கெட் வேல்யூ ஏற்பட்டிருப்பதால், அவர் கடந்த இரண்டு ஆண்டுளாக நடித்து வந்த நாரதன் என்ற படத்தை விரைவில் முடித்து வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த படம் ஒரு நாளில் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறதாம். அதோடு, ஆக்சன், காமெடி என இரண்டுவிதமான நடிப்பையும் கலந்து கட்டி நடித்திருக்கும் நகுல், இந்த படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறாராம்.