ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஸ் மகாராஜின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் கிக் 2 ஆகும். அந்த படத்தை பற்றி வெளிவரும் அனைத்து செய்திகளையும் மிகவும் ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் ரவி தேஜாவின் ரசிகர்கள் படித்து வருவது நினைவிருக்கலாம். தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிக் 2 படத்தின் ஆடியோ ரிலீஸ் இந்த மாதம் 9ம் தேதி ரிலீசாகிறது என்று செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டதே அந்த படத்தின் இசை அமைப்பாளரான தமன் தான் என்பது கூடுதல் சிறப்பாகும். ஆனால் எங்கு, எப்போது என்பது பற்றி தமன் தெளிவாக கூறவில்லை. அந்த தகவல்கள் படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் ஆகும். பிரபல ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா காமராவுக்கு பின்னால் இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை ரேஸ் குர்ரம் பட புகழ் சுரேந்தர் ரெட்டி இயக்குவதால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக நந்தமூரி கல்யாண் ராம் தயாரிக்கிறார். பலுபு மற்றும் பவர் என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்திருக்கும் மாஸ் மகாராஜ் ஹாட் டிரிக் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.