ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இங்கே 32 வயதான நயன்தாரா இன்னும் கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.. கேரளாவிலோ 30 வயதான காவ்யா மாதவனை ஆறு வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க வைத்தார்கள். இப்போது உச்சபட்சமாக 'எண்டே அம்மா' என்கிற படத்தில் 20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன். என்ன கொடுமை சார் இது என்பதா அல்லது அவரது துணிச்சலை நினைத்து பாராட்டுவதா என்றே தெரியவில்லை.
காவ்யா மாதவன் ஒருபோதும் அம்மாவாக நடிக்க தயங்கியதே இல்லை. தற்போது அவர் நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கும் 'ஆகாசவாணி' படத்தில் ஆறு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தபோது எப்படி தயக்கமின்றி ஒப்புக்கொண்டாரோ, அதேபோலத்தான் இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே 20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் காவ்யா மாதவன்.
கதாசிரியரும் இயக்குனருமான அனில் குஞ்சப்பன் இயக்கம் இந்தப்படத்தில் வட கேரளாவை சேர்ந்த ராஜநந்தினி என்கிற தைரியமான அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன். இதில் அவருடைய கதாபாத்திரத்திற்கு வயது 47. அவர் வாழ்க்கையின் நான்கு நிலைகளை விலாவாரியாக சொல்லும் இந்தப்படம் ஆர்ட் பிலிம் இலை. பக்க கமர்ஷியல் படமாம்.