சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பர்கான் அக்தர், இர்பான் கான், ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது வரிசையில் இப்போது சோனம் கபூரும் இணைய இருக்கிறார். இவர்கள் எல்லோரும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்துள்ளனர். அதேப்போல் இப்போது சோனம் கபூரும், நீர்ஜா பனாட் ரோலில் நடிக்க இருக்கிறார். யார் இந்த நீர்ஜா...? 1986ம் ஆண்டு ஆண்டு, பயங்கரவாதிகளால் பேன் ஆம் விமானம் கடத்தப்பட்டபோது, பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார். இப்போது இவரது வாழ்க்கை சினிமாவாகிறது. இதில் தான் சோனம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நீர்ஜாவின் அம்மாவாக அதாவது, சோனம் கபூரின் அம்மாவாக ஷபானா ஆஸ்மி நடிக்க இருக்கிறார். ஷபானா, அனில் கபூரின் நல்ல நண்பர் என்பதால் நிச்சயம் அவர் இந்த ரோலில் நடிப்பார் என்கிறார்கள். இப்படத்தை பிரபல புகைப்பட கலைஞர் அதுல் காஸ்பேக்கர் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்க இருக்கிறார்.