பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஜான் ஆபிரஹாம் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் போர்ஸ். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரிப்பாளர் விபுல் ஷா திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் கத்ரீனா கைப்பை, ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடியாக்கவும் எண்ணியுள்ளார். ஆனால் இதில் நடிப்பது பற்றி கத்ரீனா இன்னும் உறுதி சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள். கத்ரீனா தற்போது தன் கைவசம் உள்ள படங்களை எல்லாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். அடுத்து அவர் நடிக்க இருக்கும் சில படங்கள் ஆரம்பமாக தாமதமாவதால் போர்ஸ்-2வில் அவர் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இப்படத்தில் அவர் நடிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.