ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வம்பு நடிகர் ஒன்பதுதாராவுடன் நடித்து வரும் படத்து பிரச்னைகள் தீர்ந்தபாடில்லையாம். அப்பா மகன்கள் பிரச்னையை தாங்க முடியாத இயக்குனர் "என்னமோ பண்ணுங்கப்பா"ன்னு சொல்லிவிட்டு பசங்களை இயக்கப்போய்விட்டார். படத்துக்கு இசை அமைக்கும் வம்பு நடிகர் தம்பிக்கு பின்னணி இசை அமைக்க சுத்தமா வரலையாம். ஏதோ ஒரு வேகத்துல பாட்டு போட்டு கொடுத்தாலும் பின்னணி இசைக்கு டண்டணக்கா போடுறாராம். அதனால வேற வழியில்லாம இயக்குனர் ஒரு முன்னணி இயக்குனரிடம் பேசி பின்னணி இசை அமைக்க சொல்லியிருக்காராம்.
இதுல கடுப்பான வம்பின் தம்பி செம கடுப்பில் தாம் தூம் என்று குதிக்க நீங்களுமாச்சு உங்க படமுமாச்சுன்னு வெளியில வந்துட்டாராம் இயக்குனர். இப்போ சமாதானமாகி உங்க இஷ்டப்படியே படத்தை முடிச்சு கொடுங்கன்னு தாடி குடும்பம் தாங்கிக்கிட்டிருக்காம். வாயை கொடுத்து முகத்தை புண்ணாக்கிக்கிறதே அவிங்க வேலையாப்போச்சுன்னு புலம்புறாராம் இயக்குனர்.