ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டு தற்போது தமிழில் கிருஷ்ணா நடிக்கும் கிரகணம் படத்தில் நடித்து வருபவர் நந்தினிராய். கோலிவுட்டின் தானும் ஒரு முக்கிய நடிகையாகி விட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள நந்தினிராய், இந்த முதல் படத்திலேயே உதட்டு முத்தக்காட்சியில் நடிப்பதோடு கிளாமர் காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறாராம். அதோடு, தமிழில் அவரை அதிக கவர்ந்த நடிகர்களின் விஜய்-தனுஷ் இருவரும் குறிப்பிடத்தக்கவர்களாம். அவர்கள் நடித்த படங்களுக்கு நான் பெரிய ரசிகை என்று சொல்லும் நந்தினிராய், அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதே எனது டார்கெட். அதனால் அதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்கி விட்டேன் என்கிறார்.
மேலும், விஜய்-தனுஷ்தான் பிடித்த ஹீரோக்கள் என்றபோதும் அஜித், சூர்யா, விக்ரமும் என்னை கவர்ந்த ஹீரோக்கள்தான். அதனால் அடுத்தடுத்து ஹீரோயிசம் கொண்ட கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கப்போகிறேன். அதோடு, கிளாமர் கதைகளில் நடித்தபோதும், ஒரு லிமிட் வைத்துதான் நடிப்பேன். எந்த காரணம் கொண்டு ஆபாச நடிகை என்ற பெயரை எடுக்க மாட்டேன் என்கிறார்.