ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு சாந்தினி நடித்த படித்துறை படம் வெளிவரவில்லை. கடைசியாக நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
தற்போது சாந்தினி வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் இயக்கும் வில் அம்பு படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து வெப்பம் இயக்குனர் அஞ்சனா இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். நடித்து முடித்துள்ள போர்குதிரை படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த மூன்று படங்களும் தனக்கு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார். இதற்கிடையில் தெலுங்கில் 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.