ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் யூகன். ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் 5 நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைளும், அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பற்றியும் சொல்கிற படம். யாஷ்மித், ஜித்து, ஷியாம், கீர்த்திவாசன், ஜிஎன்ஆர், பிரதீப் பாலாஜி, சாக்ஷி அகர்வால், ஆயிஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரவி ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார், ரஷந்த் அர்வின் இசை அமைக்கிறார்.
"யூகன் என்றால் எதையும் முன்கூட்டியே யூகிக்கிறவன் என்று பொருள். பொதுவாக திகில் படங்கள் என்றால் ஒரு காட்டு பங்களாவிலோ, அல்லது காட்டிலோ நடக்கும். ஒரு ஐடி கம்பெனியில் நடப்பது மாதிரியான திகில் படம் இது. எந்த கம்ப்யூட்டர் கிராபிக்சும் இல்லாமல் கேமரா டிரிக், லைட்டிங், மேக்அப் மூலமே மிரட்டியிருக்கிறோம்" என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான கமல் குமார்.