ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படமான தல 56 படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட சில நாட்களில், ஏற்கனவே இசையமைக்க ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்குப்படத்திலிருந்து விலகினார் அனிருத். அஜித்தின் புதிய படத்தை கமிட் பண்ணிய காரணத்தினால் இன்னொருவரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகியுள்ளார். அவர்.. ஸ்ருதிஹாசன்.
'பிவிபி சினிமாஸ்' தயாரிப்பில் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்க தமிழ், தெலுங்கு இரண்டுமொழிகளில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் தமிழ்ப்பதிப்பின் பூஜை கூட சமீபத்தில் சென்னையில் நடந்தது. வம்சி இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்தார்.
இந்நிலையில், இப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியுள்ளார். இப்போது விஜய் உடன் 'புலி', மகேஷ்பாபுவுடன் நடிக்கும் தெலுங்கு படம், தமிழ் 'ரமணா'வின் ஹிந்தி ரீ-மேக் ஆன 'கப்பார்' ஆகிய படங்கள் ஸ்ருதி ஹாசன் கைவசம் இருக்கின்றன. இந்தப்படங்களில் பிசியாக இருப்பதால் கார்த்தி உடன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்திற்கு டேட் கொடுக்க முடியவில்லை என்று காரணம் சொல்லி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
ஆனால், உண்மையான காரணம் வேறு. கார்த்தி நடிக்கும் படத்தைவிட அதிக சம்பளம் தந்ததால் அஜித் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டாராம். எனவேதான் கார்த்தி படத்தில் நடிக்க முடியாததற்கு சாக்குபோக்கு சொல்லி கழன்று கொண்டுவிட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.