ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் தமிழில் வாய்ப்புகள் அதிகம் வந்த போது குழந்தைகளுக்காக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இப்போது வரும் வாய்ப்புகளை விஜி தவறவிடுவதில்லை. தமிழில் சமீபகாலமாக சில படங்களில் நடித்தார். இப்போது மலையாளத்தில் விஜி சந்திரசேகருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மம்முட்டியுடன் ஒரு படத்தில் சேர்கிறார் விஜி. இந்த படத்தை சலீம் அகமது இயக்குகிறார். அதே போல ஜெயராம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கண்ணன் இயக்குகிறார். இதற்கு முன்பு சில ஆவணப் படங்களை கண்ணன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் படபிடிப்பு கேரளாவில் முதல் கட்டமாக தொடங்குகிறது.