ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குசேலன், சந்திரமுகி என ரஜினி படங்களில் நடிக்கத் தொடங்கிய வடிவேலு, அந்த படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்தவர். அவரது காமெடி காட்சிகளைப்பார்த்து ரஜினியே அவரை வெகுவாக பாராட்டினார். குறிப்பாக, சந்திரமுகி படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்ததினால்தான் அது பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் அந்த சமயத்தில் அவரை புகழ்ந்தார்.
அதன்காரணமாக, தான் நடித்த லிங்கா படத்திலும் ரஜினி நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ரஜினி. அதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் வடிவேலுவை அழைத்து பேசியபோது, அவர் கேட்ட சம்பளம் அவரை தலைசுற்ற வைத்துவிட்டதாம். அதாவது, எத்தனை நாள் கால்சீட், எத்தனை சீன் என்பதைப் பற்றியெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு 10 கோடி கொடுத்து விடுங்கள் என்று அடித்து சொல்லிவிட்டாராம்.