ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் 2 படங்களில் நடித்துள்ள தனுஷ், விரைவில், பாலிவுட்டில், தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டுள்ளார். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ், சமீபகாலமாக, நடிப்பைக் காட்டிலும், பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான படங்களை காட்டிலும், அவரது தயாரிப்பில் உருவான படங்கள் பெரும்வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஞ்சனா படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில், தனுஷ் அறிமுகமானார். பின் பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள ஷமிதாப் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே, பாலிவுட்டிலும், தயாரிப்பாளர் ஆவதற்கான நடவடிக்கைகளில் தனுஷ் களமிறங்கியுள்ளார். மிகப்பெரிய முயற்சியில் இறங்கியுள்ள தனுஷ், இதிலும் வெற்றிவாகை சூடுவார் என்று எதிர்பார்ப்போம்....