ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமலின் மகளாக இருந்தாலும் ஆரம்பத்தில் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இசைத்துறையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஒரு இசையமைப்பாளராக தனது தனித்தன்மையை நிரூபிக்கத்தான் முதலில் முயற்சி செய்தார் ஸ்ருதிஹாசன்.. அதன் பின்னர் தான் நடிகையாக தடம் மாறினார். மலையாள ஆக்சன் கிங்கான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவும் இதேபோல இசையில் நாட்டமுள்ளவர்தான். சினிமாவில் தனது முதல் என்ட்ரியாக 55 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய ஜோ வி லோ என்கிற மியூசிக் சம்பந்தமான படத்திற்கு ஒரு பாடலை ஆங்கிலத்தில் எழுதியதுடன் தானே அதற்கு இசையமைத்தும் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்ருதியைப்போல அடுத்து நடிப்பு பக்கமும் இவர் பார்வையை திருப்புவாரா என்பதை இப்போதே கணிக்க முடியாதே.