Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2014 ரீவைண்டிங்: விண்ணிற்கு சென்ற நட்சத்திரங்கள்

27 டிச, 2014 - 11:18 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் புதியவர்கள் வருகை அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் பல சாதனையாளர்களையும், கலைஞர்களையும் இழந்தது.


2014ம் ஆண்டில் இந்த மண்ணிலிருந்து விண்ணிற்கு சென்ற நட்சத்திரங்கள்...


கே.பாலச்சந்தர்: நீர்க்குமிழி மாதிரிதான் வாழ்க்கை என்று தன் முதல் படத்திலேயே சொன்னவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் என்ற இரு மாபெரும் கலைஞர்களை உருவாக்கி தந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை அறிமுகம் செய்தவர். 100 படங்களுக்குமேல் இயக்கி சாதனை படைத்தவர். வாழும் வரலாறாய் இருந்த கே.பி. தனது 84வது வயதில் டிசம்பர் 23ந் தேதி காலமானார். திரையுலகமே திரண்டு அவரை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்தது.


பாலுமகேந்திரா: காட்சி வழி கதை சொன்ன ஓளி ஓவியர் பாலுமகேந்திரா. சினிமாவை முறைப்படி கற்று அதனை மக்களுக்கு தந்தவர். இவரது படங்கள் எப்போதும் அழியாத கோலங்கள்தான். மூன்றாம் பிறையும், யாத்ராவும், வீடும், சந்தியாராகமும் அவர் பெயரை சினிமா உள்ளவரை சொல்லிக் கொண்டிருக்கும். பிப்ரவரி 14ந் தேதி மறைந்தார்.


எஸ்.எஸ்.ராஜேந்திரன்: இலட்சிய நடிகராய் வலம் வந்தவர். பக்தி. புராண படங்களில் நடிப்பதில்லை என்ற குறிக்கோளை கடைசி வரை கடைபிடித்தவர். அரசியலில் தேடி வந்த வாய்ப்புகளை உதறியவர். கடைசி காலம் வரை தன் இமேஜை காப்பாற்றிய கலைஞர் அக்டோபர் 24ந் தேதி நம்மை விட்டு பிரிந்தார்.


அஞ்சலிதேவி: திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு வந்து 300 படங்களுக்குமேல் நடித்த பழம்பெரும் நடிகை. எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர். சாய்பாபாவின் பக்தை. ஆகஸ்ட் 7ந் தேதி அவரது திருவடி சென்றடைந்தார்.


இராம.நாராயணன்: 120 படங்களுக்கு மேல் இயக்கிய கின்னஸ் சாதனையாளர். 70 படங்களுக்கு மேல் தயாரித்தவர். சிறிய முதலீட்டில் படம் எடுத்து வெற்றி கண்டவர். விலங்குகளை வைத்து நிறைய படங்கள் எடுத்தாலும் சிகப்பு மல்லி, கூட்டுப்புழுக்கள் என யதார்த்த சினிமாவும் தந்தவர். ஜூன் 22ந் தேதி முதல் சினிமா இயக்கத்தையும் தன் உயிர் இயக்கத்தையும் நிறுத்திக் கொண்டார்.


ருத்ரைய்யா: அவள் அப்படித்தான், கிராமத்து அத்யாயம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய அவள் அப்படித்தான் படமும், அவரும் தமிழ் சினிமாவின் டாப் டென்னுக்குள் இருக்கிறார்கள். கருப்பு வெள்ளையில் ஒரு பெண்ணின் வலியை பேசியவர். நவம்பர் 18ந் தேதி நம்மை விட்டு பிரிந்தார்.


அசோக்குமார்: பாலுமகேந்திராவுக்கு நிகரான ஒளிப்பதிவாளர். நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி உள்பட 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். பேக்லைட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியர். சில படங்களை இயக்கவும் செய்தார் நீண்டநாள் மரண படுக்கையில் இருந்து அக்டோபர் 22ந் தேதி காலமானார்.


எஸ்.பாலசுப்பிரமணியம்: ஜெமினி பிச்சர்ஸ்சின் அதிபர். எம்.ஜி.ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் உள்பட சில படங்களை இயக்கியவர். 50 ஆண்டுகள் ஆனந்தவிகடன் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். பறவைகளின் நேசர், இயற்கை விவசாயி. இப்படி பன்முகங்களை கொண்டவர். டிசம்பர் 19ந் தேதி தனது 79வது வயதில் காலமானார்.


காதல் தண்டபாணி: காதல் படத்தில் வில்லனாக அறிமுகமாகி 60 வயதுக்கு மேல் அம்மைதழும்பு முகத்துடனேயே குறுகிய காலத்திற்குள் 50 படங்களுக்கு மேல் நடித்தவர். ஜூலை 20ந் தேதி காலமானார்.


இவர்கள் தவிர இன்னும் சில நட்சத்திரங்கள்


நடிகர் உதயகிரன் ஜனவரி 6ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். மீசை முருகேசன் (நவம்பர் 9), பழம்பெரும் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு (ஜனவரி 4), கொடுக்காபுளி செல்வராஜ் (ஜூன் 12) ஆகியோரும் இன்னுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்கள்.


இவர்கள் அனைவரது ஆன்மாவும் சாந்தியடைய பிரார்த்திப்போம்...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in