இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சேலம், திருப்பூர், கோவை, மதுரை மாவட்டங்களில்தான் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் திருப்பூரில் ரஜினி ரசிகர்கள் எப்போதுமே முன்னணியில் நிற்பார்கள். 1990ம் ஆண்டே திருப்பூர் ரசிகர்கள் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுறை தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். 4 மாவட்டங்களில் இயங்கும் இந்த தொழிற் சங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம்பேர் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் என்பவர் இருக்கிறார்.
இப்போது ரஜினியின் பிறந்த நாளையொட்டி திருப்பூரில் தொழிற் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி தொழிற்சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிவிட்டனர். கட்சிக்கு "சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்" (எஸ்.எஸ்.எம்.கே) என்று பெயர் சூட்டி உள்ளனர். நீலம், வெள்ளை, சிகப்பு நிறத்துடன் நடுவில் நட்சத்திரம் வரையப்பட்ட கொடியை கட்சி கொடியாக அறிமுகப்படுத்தினார்கள். கொடியில் மகாத்மா காந்தி, நேதாஜி, பெரியார், காமராசர் படங்களும் இடம்பெற்றுள்ளது.
"கடந்த 30 வருடங்களாக சூப்பர் ஸ்டாரின் பெயரில் பல்வேறு மக்கள் பணியாற்றி வருகிறோம். தொழிற் சங்கம் தொடங்கினோம். இப்போது அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதனால் கட்சியை தொடங்கிவிட்டோம். 14 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூப்பர் ஸ்டாருக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவரது படத்தையோ பெயரையோ எங்கும் பயன்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் என்பது மட்டுமே அடையாளமாக இருக்கும்" என்கிறார் கட்சித் தலைவர் முருகேஷ்.