ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தேதியில் மிகவும் அதிர்ஷ்டகரமான தென்னிந்திய திரைப்பட நடிகை யார் என்று கேட்டால் அனுஷ்காவைத்தான் சொல்ல வேண்டும். தமிழில் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுக்கும் ரஜினியுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அந்த வாய்ப்பு இன்றைய நடிகைகளுக்கு அதிகமாக கிடைக்கவில்லை. சுமார் 4 வருடங்களாக ரஜினிகாந்த் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதனால், தற்போது முன்னணியில் இருக்கும் பலரால் அவருடன் நடிக்க முடியாமல் போனது.
ஆனால், யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் அனுஷ்காவிற்கு 'லிங்கா' படத்தின் மூலம் கிடைத்தது. ரஜினிகாந்தின் முக்கிய ஜோடியாக அனுஷ்காதான் 'லிங்கா' படத்தில் நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹாவும் இன்னொரு நாயகியாக இருந்தாலும் அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் குறைவாகத்தான் வருகிறார் என்கிறார்கள்.
ரஜினிகாந்துடன் நடித்துள்ள அதே சமயத்தில் தமிழின் மற்றொரு முன்னணி நாயகனான அஜித்துடன் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படங்களுக்கு முன் தமிழின் மற்ற முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோருடனும் அனுஷ்கா நடித்திருக்கிறார். தற்போதுள்ள நடிகைகளில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள அதிர்ஷ்டம் அனுஷ்காவிற்குக் கிடைத்துள்ளது. இந்த விதத்தில் அனுஷ்காவிற்குப் போட்டியாக இருக்கும் ஒரே நடிகை நயன்தாராதான்.