ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் மாரீசன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரண்மனை செட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் இப்படத்தில் விஜய்-ஹன்சிகா நடித்த பாடல் காட்சியுடன்தான் படப்பிடிப்பு தொடங்கியது. அதையடுத்து, ஸ்ரீதேவி-ஹன்சிகா- சுதீப் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது.
அப்படி ஒரு வாரம் நடைபெற்ற பிறகுதான் ஸ்ருதிஹாசன் மாரீசனுக்காக மும்பையில் இருந்து சென்னை வந்தார். அதையடுத்து, அவரையும் இளவரசி கெட்டப்புக்கு மாற்றிய சிம்புதேவன், விஜய்யுடன் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கத் தொடங்கினார். அப்படி இரண்டொரு நாட்கள் படமாக்கியவர், இப்போது விஜய்- ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஆகியோர் இணைந்து நடிக்கிற காட்சிகளையும் படமாக்கி வருகிறாராம்.
அந்த காட்சிகள் காதல் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் ஏதோ ஒரு பிரச்னையை அவர்கள் சமாளிப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் காட்சிகளாக உள்ளதாம். இதில் சில காட்சிகளில் அவர்கள் ஆவேசம் காட்டி நடிப்பதால், ஒவ்வொரு டேக்கையும் ஒன்றுக்கு பலமுறை ஷூட் பண்ணும் சிம்புதேவன், ஹன்சிகா சம்பந்தப்பட்ட அதிகப்படியாக டயலாக் உள்ள காட்சிகளை ப்ராம்டிங் முறையில் படமாக்குகிறாராம்.