அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை புடவை கெட்டப்பில் நடிக்க வைத்தவர் கெளதம்மேனன். த்ரிஷாவின் அந்த கெட்டப் இளவட்ட ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதனால் புடவையில் அவரது அழகை பக்கம் பக்கமாக வர்ணித்து கவிதைகள் எழுதினர். இதனால் சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்ற த்ரிஷா, இது உங்களால்தான் சாத்தியமானது என்று கெளதம்மேனனுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை அப்போது தெரிவித்துககொண்டார்.
இந்த நிலையில், தற்போது தான் இயக்கி வரும் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவை மீண்டும் புடவை கெட்டப்பில் நடிக்க வைத்துள்ளார் கெளதம்மேனன். அதிலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை விட டபுள் மடங்கு த்ரிஷாவை ஹை-லுக்கில் காண்பித்திருக்கிறாராம். அதோடு அவரது ஹேர் ஸ்டைலையும் வித்தியாசப்படுத்தியுள்ளாராம்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, தன்னை கெளதம்மேனன் ஸ்டைலிஷான கெட்டப்புக்கு ஒவ்வொரு முறை மாறறும்போது அந்த காஸ்டியூமில் தன்னை விதவிதமாக போட்டோககள் எடுத்து வைத்துக்கொண்டு ரசிக்கிறாராம். அதோடு, இதுவரை என்னை இந்த அளவுக்கு யாருமே அழகாக காண்பித்ததில்லை. என்றும் அவரிடம் மகிழச்சியை தெரிவித்துக்கொள்கிறாராம்.