'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
தமிழில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நயன்தாரா, சூர்யாவுடன் 'மாஸ்', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', ஜெயம் ரவியுடன் 'தனியொருவன்', உதயநிதி ஸ்டாலினுடன் 'நண்பேன்டா', ஆரியுடன் 'நைட் ஷோ' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 2015ம் ஆண்டிலும் நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மலையாளத் திரையுலகில் 2003ம் ஆண்டு 'மனசினக்கரே' என்ற படம் நடிகையாக அறிமுகமானவர் 2005ல் வெளிவந்த 'ஐயா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். காதல், பிரிவு என தனிப்பட்ட பிரச்சனைகளில் அவர் சிக்கினாலும் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். மலையாளத்தில் அவர் கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு 'எலக்ட்ரா' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
தற்போது மீண்டும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதற்கு முன் இவர்களிருவரும் 'ராப்பகல், தஸ்கரவீரன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை தமிழில் 'பிரண்ட்ஸ், காவலன்' உள்ளிட்ட படங்களையும் மலையாளத்தில் பல படங்களையும் இயக்கிய சித்திக் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் 'காவலன்' படத்தின் மலையாள படமான 'பாடிகார்ட் ' படத்தில் நயன்தாரா ஏற்கெனவே நடித்திருக்கிறார். புதிய படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 55 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
நயன்தாராவின் ரீ-என்ட்ரியை மலையாளத் திரையுலகம் ஆச்ச்ரியத்துடன் பார்க்கிறதாம்.