ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீவா, துளசி நடித்து சமீபத்தில் வெளியான படம் யான். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி இருந்தார். ஆர்.எஸ்.இன்போடைய்ன்மெண்ட் சார்பில் எல்ரட் குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் 1978ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான படம் மிட்நைட் எக்ஸ்பிரஸ். இது தொடர்பான ஆதாரங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
இதைப் பார்த்த தயாரிப்பாளர் எல்ரெட்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். "ரவி கே.சந்திரன் பொறுப்புமிக்க பெரிய ஒளிப்பதிவாளர் அவர் இது எனது சொந்தக் கதை நானே எழுதியது. இதை நான் முறையாக பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று சொன்னதை நம்பி படத்தை தயாரித்தோம். படத்தால் பல கோடி நஷ்டம் என்பதோடு ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது என்று பயந்து கொண்டிருக்கிறோம் என்கிறது தயாரிப்பு வட்டாரம். ஆனால் ரவி கே.சந்திரனோ அப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. இது தொடர்பாக என்னை யாரும் சந்திக்கவில்லை. பேசவில்லை என்று கூறியிருக்கிறார். ரவி.கே.சந்திரன் மீது கதை மோசடி வழக்கு தொடரலாமா என்று தயாரிப்பு தரப்பு, சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து வருகிறது.